Posts

தக்லீத்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.. *🌟தக்லீத் என்றால் என்ன❓* ▪️" ஈயடிச்சாங்காப்பி" என்ற சொல்வழக்கு ஒன்று உள்ளதல்லவா அதைப்போல, ஒருவர் செய்வதை பார்த்து அச்சுபிசகாமல் அப்படியே செய்வது. ▪️ஒருவர் சொல்வதை எந்த ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உட்படுத்தாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்பது. ▪️முன்னோர்கள் பெரியார்களது கலாச்சாரத்தை மூடநம்பிக்கைகளை அப்படியே செய்வது. இவை தான் தக்லீத். ஆனால் சிலர், ஒரு விசயத்திற்கு ஒருவரின் விளக்கத்தை சரிகண்டாலே அதை தக்லீத் என்று கூறி நகையாடுகிறார்கள். ⭐🌜ஒருவிசயத்தை சரியா தவறா என்று சிந்தனை ரீதியாகவோ அல்லது ஆய்வு ரீதியாகவோ ஒருவர் முன்னெடுத்தாலே அங்கு தக்லீத் உடைந்து விடுகிறது.🌛⭐ தக்லீத் என்று வசைபாடி அல்லது நகையாடி எத்தனையோ நல்ல கல்வியறிவு பெற்ற ஆலிம்களின் இமாம்களின் கருத்துகளை மக்கள் ஏற்பதை விட்டும் சிந்திப்பதை விட்டும் திசைதிருப்புகின்றனர். இதற்கு பெயர் தக்லீது அல்ல. ⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️ இஸ்லாத்தில் தக்லீதிற்கு அனுமதி உள்ளதா என்றால் , 👉அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றை கட்டளையிட்டால் அதை அப்படியே ஏற்பது ஈமானின் அம்சம் ஆகும்....

எதிர்க்கேள்விகள்

 எதிர்க்கேள்விகள்.. ================================== இஸ்லாம் கேள்விகள் கேட்பதை ஊக்குவிக்கின்றது... அநாவசிய ,அறிவற்ற கேள்விகளுக்கு தடை இருந்தாலும், நம்பிக்கையை அதிகரிக்க, சந்தேகங்களில் இருந்து தெளிவடையச் செய்யும் கேள்விகளை இஸ்லாம் ஊக்குவிக்கிறது.. இப்ராஹிம் அலை அவர்கள் இறைவனிடம் உயிர்ப்பித்தலைப்பற்றி கேட்ட கேள்வியில் இந்தநடைமுறை ஆரம்பிக்கிறது.. அல்லாஹ் அதை அங்கீகரித்தான்.. அழகிய முறையில் பதிலளித்தான்.. குறைஷிகள் பலரும் நபிகளாரிடம் கேள்வி கேட்டுள்ளனர்.. யூதர்களில் பலரும் பல சந்தர்ப்பங்களில் நபியவர்களிடம் கேள்விகள் கேட்டுள்ளனர்.. நபிகளார் என்னிடமே கேள்வி கேட்பதா?? தூதரிடமே கேள்வியா?? கேள்வி கேட்க நீங்கள் அறிஞரா?? என்றெல்லாம் நபிகளார் எப்போதும் கேட்டதில்லை.. அழகிய முறையில் பதில் தந்தார்கள்.. அந்த அணுகுமுறையே இஸ்லாத்தில் அவர்களை கொண்டு சேர்த்தது.. =================================== அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூத...