தக்லீத்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..

*🌟தக்லீத் என்றால் என்ன❓*

▪️" ஈயடிச்சாங்காப்பி" என்ற சொல்வழக்கு ஒன்று உள்ளதல்லவா அதைப்போல,
ஒருவர் செய்வதை பார்த்து அச்சுபிசகாமல் அப்படியே செய்வது.

▪️ஒருவர் சொல்வதை எந்த ஆய்வுக்கும் சிந்தனைக்கும் உட்படுத்தாமல் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஏற்பது.

▪️முன்னோர்கள் பெரியார்களது கலாச்சாரத்தை மூடநம்பிக்கைகளை அப்படியே செய்வது.

இவை தான் தக்லீத்.

ஆனால் சிலர்,
ஒரு விசயத்திற்கு ஒருவரின் விளக்கத்தை சரிகண்டாலே அதை தக்லீத் என்று கூறி நகையாடுகிறார்கள்.

⭐🌜ஒருவிசயத்தை சரியா தவறா என்று சிந்தனை ரீதியாகவோ அல்லது ஆய்வு ரீதியாகவோ ஒருவர் முன்னெடுத்தாலே அங்கு தக்லீத் உடைந்து விடுகிறது.🌛⭐

தக்லீத் என்று வசைபாடி அல்லது நகையாடி எத்தனையோ நல்ல கல்வியறிவு பெற்ற ஆலிம்களின் இமாம்களின் கருத்துகளை மக்கள் ஏற்பதை விட்டும் சிந்திப்பதை விட்டும் திசைதிருப்புகின்றனர்.
இதற்கு பெயர் தக்லீது அல்ல.

⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️

இஸ்லாத்தில் தக்லீதிற்கு அனுமதி உள்ளதா என்றால் ,

👉அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றை கட்டளையிட்டால் அதை அப்படியே ஏற்பது ஈமானின் அம்சம் ஆகும்.

*إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ*

51. அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 24:51

👉எனினும் இறைவன் கண்மூடித்தனமாக பின்பற்றும் அளவிற்கு குருட்டுத்தனமான மார்க்கத்தை தரவில்லை.

அனைத்து விசயங்களுக்கும் சிந்தனை ரீதியான கருத்து ரீதியான ஆதாரங்களை உள்ளடக்கியே இந்த மார்க்கம் நமக்கு அருளப்பட்டுள்ளது.

*أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا*

24. அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?

திருக்குர்ஆன் 47:24

*وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ*

17. இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

திருக்குர்ஆன் 54:17

✔️ஆக , அறிவு வழங்கப்பட்டவர் சிந்தனை செய்வதன் மூலம் இம்மார்க்கத்தின் ஆழ அகலங்களை அறிந்து கொள்கிறார்

✔️பாமரர் கேட்ட உடன் கட்டுப்பட்டு தன் ஈமானை பாதுகாக்கிறார்.

இரண்டுக்கும் இங்கே இடமுண்டு.

அல்லாஹ்வும் அவனது தூதரும் தவிர்த்த ஏனைய மனிதர்கள் விசயத்தில் ,

❌மார்க்கத்தில் எதையேனும் கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை.
❌புதிதாக ஒரு வணக்கத்தையோ அமலையோ உருவாக்க அனுமதி இல்லை.
❌வணக்க வழிபாடுகளின் செயல்முறைகளை கூட்டவோ குறைக்கவோ மாற்றவோ அனுமதி இல்லை.

👉மார்க்கம் என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை , மேலும் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ,அடிமை முதல் ஆட்சியாளர் வரை, அனைவருக்கும் சொல்லப்பட்ட சட்டதிட்டங்களும் ஒழுக்கங்களும் ஆகும்👈

அது அல்லாத விசயங்களில்,

✔️குர்ஆன் சுன்னாவிற்கு தோதுவான கருத்துகளை யாரேனும் சொன்னால் ஏற்கலாம்.
✔️குர்ஆனுக்கும் சுன்னாவுக்கும் முரண்படாத கருத்துகளை யார் சொன்னாலும் ஏற்கலாம்.

✅இவற்றை நிராகரிக்கவும் உரிமை உண்டு.

ஆனால் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லாத ஒன்றை அல்லாஹ்வின் பெயராலோ அவனது தூதரின் பெயராலோ சொல்லி விடக்கூடாது.

Comments

Popular posts from this blog

எதிர்க்கேள்விகள்